» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜோத்பூர் விமான நிலையத்தில் ₹480 கோடி புதிய முனையக் கட்டிடம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
சனி 4, ஜூலை 2026 5:14:30 PM (IST)

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் விமான நிலையத்தில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டிடம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை ஜோத்பூர் விமான நிலையத்திற்கு மோடி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பகாடே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் மற்றும் ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் நேரில் சந்தித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஜோத்பூர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையக் கட்டிடத்தை மோடி திறந்து வைத்தார். சுமார் 23 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 480 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையம், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு எவ்வித தடையுமற்ற, வசதியான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் அனைத்து நவீன உள்கட்டமைப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் அரச பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கட்டிடக்கலையுடன், வளைவுகள் மற்றும் ‘ஜரோகா’ எனப்படும் பாரம்பரிய ஜன்னல்கள் போன்ற அம்சங்களை நவீன வடிவமைப்போடு ஒருங்கிணைத்து இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
புதிய 'உடான்' திட்டம் மற்றும் திட்டங்கள் அறிவிப்பு:
புதிய முனையத்தைத் திறந்து வைத்த பின்னர், திருத்தப்பட்ட 'உடான்' (UDAN) திட்டத்தையும் மோடி இன்று தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் 28,840 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், நாட்டின் விமானப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை விரைவுபடுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் பலோத்ராவில் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். இந்த பிரம்மாண்ட திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட பல முக்கிய துறைகளை உள்ளடக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)


