» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது!

வியாழன் 29, ஜனவரி 2026 8:24:37 AM (IST)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்சை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வியாசாரம் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி தசரத் - லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், சுரேகா உள்பட 3 மகள்களும் உள்ளனர். சுரேகா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு சுரேகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு மற்றொரு வாலிபருடன் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் சுரேகா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

தசரத்தும், அவரது மனைவி லட்சுமியும் கால்வலியால் சிரமப்பட்டு வந்தனர். நர்சான தனது மகள் சுரேகாவிடம் கால் வலி அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுரேகா, கால்வலியை தீர்ப்பதற்கான மருந்து என்று கூறி நைசாக 2 பேருக்கும் விஷ ஊசி செலுத்தினார். 

இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். கொலையை மறைக்க நினைத்த சுரேகா, இருவரையும் வீட்டில் படுக்க வைத்தார். பின்னர் தனது சகோதரருக்கு போன் செய்து, தந்தையும், தாயும் சுயநினைவின்றி கிடப்பதாக கூறியுள்ளார். உடனே அவர் பதற்றத்துடன் வந்து பார்த்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடன் தொல்லை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே சுரேகாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போதுதான் பெற்றோர் என்றும் பாராமல் அவர்களை விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மற்றவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய நர்சே 2 பேரின் உயிரை அதுவும் தன்னை பெற்ற பெற்றோரையே கொன்ற கொடூரம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory