» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)
நாட்டின் அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க வழிவகை செய்யும் ‘சாந்தி’ சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.
நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவா் சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அணுசக்தித் துறை தொடா்பாக நடைமுறையில் இருந்த 1962-ஆம் ஆண்டு அணுசக்தி சட்டம், 2010-ஆம் ஆண்டு அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் ஆகிய பழைய சட்டங்களை இந்தப் புதிய சட்டம் ரத்து செய்கிறது. அணுசக்தி தொடா்பான அனைத்து விதிமுறைகளும் இப்போது இந்த ஒரே சட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதுவரை மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த அணுசக்தித் துறையில், இனி தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் தொழில்நுட்பப் பங்களிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இதன்படி, மத்திய அரசிடம் முறையான உரிமம் பெற்று, தனியாா் நிறுவனங்கள் அல்லது அரசுடன் இணைந்த கூட்டு நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை அமைத்து இயக்க மற்றும் பராமரிக்க முடியும். இதனால், நாட்டின் அணுமின் உற்பத்தித் திறன் பலமடங்கு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேநேரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சில பிரிவுகள் தொடா்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் மற்றும் தோரியம் சுரங்கப் பணிகள், அணு எரிபொருள் செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி, உயா்நிலை கதிரியக்கக் கழிவு மேலாண்மை போன்ற முக்கியப் பணிகளில் மத்திய அரசு அல்லது அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே தொடா்ந்து ஈடுபட முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவிலிருந்து 7 கச்சா எண்ணெய் கப்பல்கள், அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு வருகை!
திங்கள் 23, மார்ச் 2026 12:49:55 PM (IST)

இந்திய அரசியலில் நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பதவி வகித்து பிரதமர் மோடி புதிய சாதனை!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:19:54 PM (IST)

பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு: பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சனி 21, மார்ச் 2026 4:52:35 PM (IST)

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சனி 21, மார்ச் 2026 4:12:29 PM (IST)

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 12:30:14 PM (IST)

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

