» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதானி ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இருந்து நீக்கம்!
சனி 15, நவம்பர் 2025 5:34:20 PM (IST)
அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ரூ. 62ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கை கட்சியிலிருந்து பாஜக நீக்கம் செய்தது.
அதானி நிறுவனத்துடன் சேர்ந்து பிகார் அரசு ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கை கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறிய பாஜக, இதுகுறித்து ஆர்.கே. சிங் விளக்கமளிக்க கோரியுள்ளது.2,400 மெகாவாட் பாகல்பூர் (பிர்பைண்டி) மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு பிகார் அரசு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 60,000 கோடி முதல் ரூ. 62,0000 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமின்றி, பிகார் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, குற்றவியல் வழக்கு பின்னணி கொண்ட தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஆர்.கே. சிங் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். பதிவில் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் ஆனந்த் சிங் மற்றும் பிகார் துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆர்.கே. சிங்கை, கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. மேலும், அவரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு பாஜக கூறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

