» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!

வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாஜக மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது என சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியில் உள்ள அஜித் பவார் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சி செய்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது: நாங்கள் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பவர்களும் அல்ல. அதேவேளையில் எந்தவொரு மொழியையும் திணிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாஜக மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஆளும்கட்சி மொழி எமர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளது. இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory