» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாராளுமன்றத்தை மூடிவிடுங்கள்: உச்சநீதிமன்ற உத்தரவு மீது பா.ஜ.க. எம்.பி., அதிருப்தி!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:19:22 PM (IST)
உச்சநீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என பாஜக எம்பி விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக சாடினார். குறிப்பாக, ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை கடுமையாக விமர்சித்த அவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூப்பர் பாராளுமன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே என்பவர், மேற்படி வழக்குகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைமுகமாக உச்சநீதிமன்றத்தை சாடியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உச்சநீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)
