» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதிகார வெறி கொண்டவர்களுக்கு குடும்ப நலனே முக்கியம்: பிரதமர் மோடி விமர்சனம்
வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:51:13 PM (IST)

"அதிகார வெறி கொண்டவர்கள், நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டமே கவனம் செலுத்தி வருகிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 44 திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 130 குடிநீர் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரு அரசு கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். மேலும், தேசிய நெடுஞ்சாலை-31 இல் ரூ. 980 கோடிக்கு மேல் மதிப்புள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் ‘எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதேயாகும். இந்த உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள், நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டமே கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காகவே, இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே அரசியல் விளையாட்டுகளை விளையாடும் இவர்களின் கொள்கை ‘குடும்பத்துக்கே ஆதரவு குடும்பத்துக்கே வளர்ச்சி’ என்பதாகும்.
கடந்த காலங்களில் பூர்வாஞ்சலில் (உத்தரப்பிரதேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி) சுகாதார வசதிகள் இல்லை. ஆனால், இன்று காசி சுகாதார தலைநகராக மாறி வருகிறது. இன்று இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டு முன்னேறி வருகிறது. நமது காசி இதற்கு சிறந்த முன்மாதிரியாக மாறி வருகிறது. இந்தியாவின் ஆன்மா அதன் பன்முகத்தன்மையில் வாழ்கிறது, காசி அதன் மிக அழகான படம்.
2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்ய எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.” என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)
