» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதன் 9, ஏப்ரல் 2025 11:23:07 AM (IST)

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 

மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நிதி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.

ரிசர்வ் வங்கி, நிதியாண்டு 2026 -க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதிபர் டிரம்ப் சீனா மீது விதித்துள்ள 104 சதவிகித வரிவிதிப்பு ஆகியவை உலக வர்த்தகத்தில் பொருளாதார நிச்சமற்றத் தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கினார்.

இந்தியாவில் பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதி கொள்கை ஆணையம், ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி கொள்கை கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருந்தனர். மேலும், 2 மாத இடைவெளியில் மீண்டும் 0.25 சதவிகிதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையும். ஏற்கனவே கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வரும் மக்களுக்கு மாதத் தவணை தொகை குறையும். மக்களிடம் சற்று பணம் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory