» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.41 குறைந்தது
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:59:08 AM (IST)
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது.
இண்டேன், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
இவற்றுக்கான விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்தது.
புதிய விலையின்படி 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்சென்னையில் ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1,762-க்கும், மும்பையில் ரூ.1,714.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,872-க்கும்.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.டெல்லியில் – ரூ.803, கொல்கத்தாவில் ரூ.829, மும்பையில் ரூ.802.50 மற்றும் சென்னையில் ரூ.818.50 என்றளவில் விற்பனையாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
