» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி தகவல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:25:58 AM (IST)
2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

நகரமயமாதல் அதிகரித்து வரும் சூழலில் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். வாகன உற்பத்தி துறையில் கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகளவில் மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
2030-இல் மின்வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும். லித்தியம் பேட்டரிகளின் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன்மூலம் மின் வாகன பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வழக்கமான வாகனங்களுக்கும் மின் வாகனங்களுக்கும் இடையேயான விலையில் உள்ள பெரும் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் சவாலாக சுற்றுச்சூழல் மாசு உள்ளது. அதை ஏற்படுத்துவதில் போக்குவரத்து துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க புதைபடிவ எரிபொருள்களுக்கு பதிலாக மின் வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டும்.
வேளாண் கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்ற பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இது உணவுப்பொருள்கள் உற்பத்தியாளா்களாக மட்டுமல்லாமல் எரிபொருள் உற்பத்தியாளா்களாகவும் விவசாயிகளை மாற்றவுள்ளது.
பசுமை தொழில்நுட்பங்கள் மூலம் மாசு மற்றும் இறக்குமதி விலையை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. தொழில்நுட்பம், இளம் பொறியாளா்களின் திறன், வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை உலகளவில் திறன்மிகுந்த நாடாக இந்தியா தொடா்வதை உறுதிசெய்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
