» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்ற சிறப்பு ரயில் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்ற வடமாநில பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 3-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட சுமார் 700 பேர் இருந்தனர். இந்த ரயில் மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரயில் என்பதால் பெட்டிகளின் கதவுகளை தமிழக பயணிகள் பூட்டி வைத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரயில் கதவில் உள்ள கண்ணாடியை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதன் காரணமாக வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:30:31 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயார்: முதல்வருக்கு அஸ்வினி வைஷ்ணவ்பதில்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:07:41 PM (IST)

நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:25:11 AM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்
சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கான பாதிப்புகள்: ஜெய்ராம் ரமேஷ் பட்டியல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:59:53 PM (IST)

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி ரூ.2.5 கோடி பறிப்பு : பெண் டிஎஸ்பி சஸ்பெண்ட்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:33:44 PM (IST)


tamilanFeb 19, 2025 - 11:22:19 AM | Posted IP 162.1*****