» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி!
வியாழன் 5, டிசம்பர் 2024 11:49:48 AM (IST)
ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் சிறப்புக் காட்சிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் இன்று காலை வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்து, கன்னடம் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லாததால் புஷ்பா 2 படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் 2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக இன்று அதிகாலையிலேயே வந்த ரேவதி (39) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கிமயக்கமடைந்த அவரை காவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அவரது குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!
வெள்ளி 2, ஜனவரி 2026 5:05:35 PM (IST)

துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு : ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவிப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 3:47:34 PM (IST)

நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.
வெள்ளி 2, ஜனவரி 2026 12:29:19 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)

