» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஷியா, ஆஸ்திரியா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
வியாழன் 11, ஜூலை 2024 11:59:20 AM (IST)
ரஷியா, ஆஸ்திரியா நாடுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி ரஷியா சென்றார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் 22வது இந்தியா - ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், ராணுவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். பின்னர், உக்ரைன் போர் குறித்தும் விவாதித்தனர்.
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்நிலையில், ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அதன்பின்னர் அங்கிருந்து பிரதமர் மாளிகைக்கு திரும்பினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
