» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 4:46:39 PM (IST)

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.

சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரியவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் துப்பட்டா மற்றும் புடவைகளை போர்த்தியபடியும் செல்கின்றனர். வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் நடமாடாமல் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையமும், அரசாங்கமும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, கர்நாடக உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் புவனேஸ்வர் நகரும், இரண்டாவது இடத்தில் கடப்பாவும் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory