» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாறிய லோகோ - தூர்தர்சன் விளக்கம்!!

சனி 20, ஏப்ரல் 2024 4:45:49 PM (IST)



தூர்தர்சனின் லோகோ நிறம் சிவப்பிலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து தூர்தர்சன் விளக்கம் அளித்துள்ளது.

தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சனின் இலச்சினை காலங்காலமாக இருந்து வந்த சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாற்றப்பட்டது பற்றி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டிடி செய்திகள் அறிவித்துள்ளது. எங்கள் விழுமியங்கள் எப்போதும் போலவே தொடரும் வேளையில், நாங்கள் இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளோம். முன்னெப்போதுமில்லாத செய்திப் பயணத்துக்குத் தயாராகுங்கள்... அனைத்து புதிய டிடி செய்திகளை கண்டு நுகருங்கள்! என்பதாகச் சில நாள்களுக்கு முன் அறிவித்திருக்கிறது தூர்தர்சன்.

ஆனால், இதைத் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனைக் காவிமயமாக்கும் முயற்சி என்பதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார் குற்றம் சாட்டியுள்ளார்.தூர்தர்சன் காவிமயமாவைக் கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி! என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜவாஹர் சர்க்கார்.

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் தமிழ் ஒளிபரப்பின் பெயரைப் பொதிகை என்பதிலிருந்து டிடி (தூர்தர்சன்) தமிழ் என்று மாற்றப்பட்டபோது, இலச்சினையும் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory