» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜகவில் இணையாவிட்டால் கைது: அமலாக்கத் துறை மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் புகார்!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:55:21 AM (IST)

பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை பா.ஜ.,வில் இணையும் படி தூது அனுப்பினர். பா.ஜ.,வின் மிரட்டலுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம். தேர்தல் நேரத்தில் சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா உள்ளிட்ட 4 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. 

பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை. இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க பா.ஜ.,வுக்கு மிகவும் எளிமையாக இருக்கும். 

இப்போது அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.-


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory