» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதல் வகுப்பு சேர்க்க 6 வயது நிரம்பியிருக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம்!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 12:14:57 PM (IST)

முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கொள்கை நாடு முழுவதும் கடந்த கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு பிரீ கேஜி முதல் 2-ம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. 

இந்த சூழலில் 2024-25-ம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், பிரீ கேஜிக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், எல்கேஜி எனில் நான்கு வயதும், யுகேஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு 5 என்ற பழைய நடைமுறையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory