» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மார்ச் 16ல் கெஜ்ரிவால் ஆஜராக உத்தரவு!

சனி 17, பிப்ரவரி 2024 4:56:34 PM (IST)

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் அடுத்த மார்ச் 16ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனிடையே, வழக்கு விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி கோர்ட்டு, விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

டெல்லி சட்டசபையில் இன்று அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் நேரில் ஆஜராக முடியவில்லை என கெஜ்ரிவால் கோர்ட்டில் தெரிவித்தார். கெஜ்ரிவாலின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் (மார்ச் 16) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory