» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் ஜனநாயக விரோதம்: காங்கிரஸ் கண்டனம்!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 3:29:46 PM (IST)

காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்த நிலையில், காங்கிரஸின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொருளாளர் செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் கிடைத்தது. இந்த கணக்குகளை மீட்க ரூ.210 கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை.

தேர்தலுக்காக பொது மக்களிடம் இருந்து காங்கிரஸ் திரட்டிய நிதியும் அந்த வங்கிக் கணக்குகளில் தான் இருக்கிறது. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என்பது ஜனநாயகத்தை முடக்கியதற்கு சமம்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory