» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 5:14:08 PM (IST)



டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசினார்.

ஆந்திர பிரதேசத்தின் முதல்வர், டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியைச் சந்தித்தார். 90 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. அவர்கள் பேசியது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஜெகன் மோகன் ரெட்டி உடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வி.விஜயசாய் ரெட்டி மற்றும் ஆர்.கிருஷ்ணையா மற்றும் திருப்பதி எம்.பி. குருமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory