» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று நேரு கூறினார் - பிரதமர் மோடி

புதன் 7, பிப்ரவரி 2024 3:37:17 PM (IST)



நேரு தனது ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப். 1-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி மக்களவையில் நேற்று உரையாற்றினாா். 

தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார். மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் ஆங்கிலேயர் கால சட்டங்களை நீக்குகிறோம் அல்லது மாற்றுகிறோம். ஆனால், ஆங்கிலேயர் கால சட்டங்களை காங்கிரஸ் அரசு இருந்தபோது ஏன் நீக்கவில்லை. ஆங்கிலேயர் கால மரபுகளை நீங்கள் ஏன் பின்பற்றினீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், 370வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகுதான், ஜம்மு காஷ்மீரில் பட்டியலினத்தவர் உரிமைகளைப் பெற்றனர். ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைக் கூட பாஜக அரசுதான் நிறைவேற்றியது என்று பிரதமர் பேசினார். முன்னாள் பிரதமர் நேரு, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடிதம் எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, நேரு தனது ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சந்திரன்Feb 7, 2024 - 04:35:19 PM | Posted IP 172.7*****

இன்னும் எத்தனை நாளைக்குடா பழைய சங்கே ஊதுவீர்கள் வேலைப்பாருங்கடா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory