» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் : ராகுல்காந்தி உறுதி

திங்கள் 5, பிப்ரவரி 2024 8:23:50 AM (IST)

பழங்குடியின மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என்று ராகுல்காந்தி கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் 14-ந் தேதி மணிப்பூரில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார்.நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் துன்டியில் யாத்திரை முடிவடைந்தது. இரவு ஓய்வுக்கு பிறகு, நேற்று தான்பாத் நகரின் கோவிந்த்பூரில் யாத்திரை தொடங்கியது. அங்கு சாலை பேரணியாக அவர் சென்றார். 

சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். சாலை பேரணியில் ராகுல்காந்தி பேசியதாவது: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் நான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம், இளைஞர்களுக்கும், பழங்குடியினருக்கும் நீதியை உறுதி செய்வதும் எங்கள் நோக்கம் ஆகும்.

பழங்குடி மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் பாதுகாக்கும். இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பாடுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வேலையின்மை ஆகியவை நாட்டின் இளைஞர்களது எதிர்காலத்தை சீரழித்து விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

இந்தியன்Feb 5, 2024 - 09:31:11 AM | Posted IP 172.7*****

இந்த வேலை வெட்டி இல்லாத பப்பு பயலுக்கு ஊர் ஊராக சுத்துற காசு எங்கிருந்து வருகிறது ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory