» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து

சனி 3, பிப்ரவரி 2024 3:28:03 PM (IST)

"எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்"  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். 

நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை மந்திரியாகவும், தகவல் தொடர்பு துறை மந்திரியாகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை." இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory