» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

வியாழன் 1, பிப்ரவரி 2024 11:01:13 AM (IST)

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைக்கின்றன.

அந்தவகையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது.எனினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலைப் பட்டியல் விவரம் வருமாறு:

நகரங்கள் விலை
டெல்லி ரூ.1,769.50
கொல்கத்தா ரூ.1887.00
மும்பை ரூ.1723.50
சென்னை ரூ.1937.00

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory