» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

புதன் 31, ஜனவரி 2024 4:57:37 PM (IST)

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் ஜன.29ல் பிகாரில் நுழைந்தது. தொடர்ந்து இரண்டு நாள்கள் பிகாரில் பயணம் மேற்கொண்ட காந்தி இன்று காலை மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் நடைப்பயணத்தைத் தொடங்கினார். பிகாரில் இருந்து யாத்திரை மீண்டும் மேற்கு வங்கத்தில் நுழைந்தபோது மால்டாவின் ஹரிச்சந்திரபூர் பகுதியில் ராகுல் காந்தியின் கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ராகுல் சென்ற காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஆனால் ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனக் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகி பாஜகவுடன் சேர்ந்ததை ராகுல் விமர்சித்திருந்தார். இதையடுத்து, இன்று அவர் சென்ற காரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சௌத்ரி தெரிவித்துள்ளார். மால்டாவில் ராகுல் காந்தியின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory