» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன் 31, ஜனவரி 2024 11:59:13 AM (IST)

பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி பிகாரில் நூற்றுக் கணக்கான விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'கடந்த 2014 ஆம் ஆண்டைவிட விவசாயிகளின் கடன் 60% அதிகரித்துள்ள நிலையில், மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்பிலான தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது.' எனக் குற்றம் சாட்டினார்.  

மேலும், 'பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பங்கான ரூ.2700 கோடியை நிறுத்தி வைத்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ரூ. 40,000 கோடி லாபம் பார்க்கின்றன. முறையான குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததால் விலையுயர்ந்த உரங்கள், விலையுயர்ந்த விதைகள், விலையுர்ந்த நீர் பாசனம் ஆகியவற்றைப் பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் உள்ளது.'  

'விவசாய செலவுகளைக் குறைப்பதும், விவசாயிகளின் பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயிப்பதுவுமே காங்கிரஸின் குறிக்கோள். விவசாயிகள் செழிப்படைய அவர்கள் பொருளாதாரத்தில் வ்ளர்வதே வழி' என அவர் தெரிவித்துள்ளார். 'நமது அரசு விவசாயிகளுக்கான அரசாக இருக்கும் தொழிலதிபர்களுக்கான அரசாக இருக்காது' எனவும் அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory