» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் : பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்!

செவ்வாய் 23, ஜனவரி 2024 12:51:50 PM (IST)



நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நேதாஜி படத்துக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் சம்விதான் சதானில் உள்ள நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதானில் இருந்த மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி நேதாஜியை பற்றி கலந்துரையாடினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,' பராக்கிரம திவாஸ் அன்று இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இன்று அவரது ஜெயந்தி நாளில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையையும், தைரியத்தையும் போற்றுகிறோம். நமது தேசத்தின் சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.' என்று தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory