» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்து விரோத திமுக அரசின் அடக்குமுறை தொடர்கிறது : நிர்மலா சீதாராமன் காட்டம்!

திங்கள் 22, ஜனவரி 2024 10:56:12 AM (IST)

தமிழகத்தில் இந்து விரோத திமுக அரசின் அடக்குமுறை தொடர்கிறது என்று  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து அயோத்தி நிகழ்ச்சியை காணும் வகையில் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டது.

இதையடுத்து அந்த எல்.இ.டி. திரையை போலீசார் அகற்றினர். அதைபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அயோத்தி நிகழ்ச்சியை காண வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகளை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி போலீசார் அகற்றினர்.

இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது. இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Jai Sri RamJan 22, 2024 - 01:25:20 PM | Posted IP 162.1*****

Jai Sri Ram

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory