» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் கடும் மூடுபனியால் ரயில் சேவைகள் பாதிப்பு!

வியாழன் 11, ஜனவரி 2024 11:43:15 AM (IST)

டெல்லியில் தொடர்ந்துவரும் அடர்ந்த மூடுபனியால் ஏறத்தாள 24 ரயில்கள் தாமதமாக டெல்லியை வந்தடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ரயில்வே அளித்த தகவலின்படி 4 ரயில்கள் 4 மணிநேரம் தாமதமாகியுள்ளது. மேலும் 4 ரயில்கள் 2.15 மணிநேரம் தாமதமாகியுள்ளது. அஜ்மீர் கத்ரா பூஜா எக்ஸ்பிரஸ் 6 மணிநேரம் தாமதமாகியுள்ளது. 

ஏறத்தாள 13 ரயில்கள் 1 முதல் 1.15 மணிநேரம் தாமதமாகியிருப்பதாக ரயில்வே தெரிவிக்கிறது. சஹர்சா - டெல்லி வைஷாலி எக்ஸ்பிரஸ் மற்றும் அம்பேத்கர் நகர் - காட்ரா எக்ஸ்பிரஸ் 3.15 மணிநேரம் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் 3 முதல் 4 நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவில் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டங்கள் காணப்படும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் மிக மிக கடுமையான குளிர் இன்றுமுதல் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory