» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 5, ஜனவரி 2024 12:01:57 PM (IST)

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க தடையில்லை என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் இறுதியில், அமைச்சராக தொடர்வதற்கு தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்திருந்தது.
 
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் சில அறிவுரைகளை அளித்த போதும், முதல்வர் அதனை ஏற்கவில்லை என்று என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பாக முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்ததையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியானதே என்றும், இதில் தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதன் மூலம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் இருந்த சிக்கல் விலகியிருக்கிறது என்று கூறப்படுகிறது. அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க தடையில்லை என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் சில அறிவுரைகளை அளித்த போதும், முதல்வர் அதனை ஏற்கவில்லை என்று என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பாக முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்ததையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியானதே என்றும், இதில் தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் இருந்த சிக்கல் விலகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory