» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்!

திங்கள் 13, ஜூலை 2026 4:02:29 PM (IST)

LoyalaManiTN.jpg

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனிருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக இருந்த திண்டுக்கல் ஐ. லியோனிக்குப் பதிலாக இப் பொறுப்பு தற்போது லயோலா மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகிய முக்கியப் பணிகளைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மேற்கொண்டு வருகிறது. இக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள லயோலா மணி, தொடர்ந்து 3 ஆண்டுகள் இப் பதவியில் நீடிப்பார்.


மக்கள் கருத்து

BalaJul 13, 2026 - 05:46:56 PM | Posted IP 104.2*****

சூப்பர் நல்ல மாற்றம்.. சாவுங்கடா...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory