» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநகராட்சி ஒப்பந்தப் பணியில் அலட்சியம் : ராட்சத குழாய் விழுந்து சிறுவன் பலி; தந்தை காயம்!

திங்கள் 13, ஜூலை 2026 11:18:19 AM (IST)

புழல் அருகே சென்னை மாநகராட்சியின் பாதாள சாக்கடைத் திட்டப் பணியின் போது கிரேன் கயிறு அறுந்து ராட்சத குழாய் கீழே விழுந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதி முழுவதும் சென்னை மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகச் சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. 24-வது தெருவில் ராட்சத கழிவுநீர் தொட்டி புதைக்கும் பணி ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட கிரேன் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ராட்சத குழாயைத் தூக்கிப் பள்ளத்தில் வைக்கும் பணியின் போது, பளுதாங்காமல் கயிறு அறுந்து குழாய் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

அச் சமயத்தில், கண்ணப்பசாமி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது 3 வயது மகன் ஷாருக் ஈஸ்வரனுடன் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அறுந்து விழுந்த ராட்சத குழாய் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

வலயால் துடித்த சிறுவனை அப் பகுதி மக்கள் மீட்டு, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

சிகிச்சை பலனின்றிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிரேதப் பரிசோதனைக்காகச் சிறுவனின் உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மருத்துவமனை முன்பு சிறுவனின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இவ் விபத்து குறித்துப் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிரேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

BalaJul 13, 2026 - 12:17:00 PM | Posted IP 172.7*****

Yenne vijay Uncle.. MLA reels yedukka poitangala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory