» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பூமணி மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு : கனிமொழி எம்.பி. இரங்கல்!
திங்கள் 13, ஜூலை 2026 10:51:31 AM (IST)

மறைந்த மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்குத் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "நவீனத் தமிழிலக்கிய ஆளுமை கரிசல் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவருமான எழுத்தாளர் பூமணி மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
கரிசல் நிலப் பகுதி மக்களின் வாழ்வியலை, மொழியை, பண்பாட்டை மையமாகக் கொண்ட கலைப்படைப்புகள் அவருடையவை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கிய வெளியில் பயணித்து வரும் அவர், தமிழின் யதார்த்தவாத புனைவெழுத்தின் முன்னோடியாக புது தலைமுறை எழுத்தாளர்களிடமும் தாக்கம் செலுத்தியவர். அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்!
திங்கள் 13, ஜூலை 2026 4:02:29 PM (IST)

பனையூரை தேசிய புவி-பாரம்பரிய பூங்காவாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்குக் கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 3:49:24 PM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

2031-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:53:56 AM (IST)

மாநகராட்சி ஒப்பந்தப் பணியில் அலட்சியம் : ராட்சத குழாய் விழுந்து சிறுவன் பலி; தந்தை காயம்!
திங்கள் 13, ஜூலை 2026 11:18:19 AM (IST)

எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பு: இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல்
திங்கள் 13, ஜூலை 2026 11:06:57 AM (IST)


