» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பு: இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல்

திங்கள் 13, ஜூலை 2026 11:06:57 AM (IST)

MariSElvarajPoomani.jpg

மறைந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்குத் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தின் மூத்த படைப்பாளி பூமணி மறைந்த செய்தி மீளாத் துயரத்தையும் வேதனையையும் அளிப்பதாகத் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். பூமணி தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் சமூகத்தின், குறிப்பாகத் தெற்கத்தி மக்களின் துல்லியமான வாழ்வியலையும் அறத்தையும் பெரும் படைப்புகளாக்கிச் சாகித்திய அகாடமி விருது பெற்றவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், பூமணியின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக அவரது நல்லடக்கத்திற்கு அரசு மரியாதை அறிவித்துள்ள தமிழக அரசுக்குத் தனது நன்றியையும் மரியாதையையும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் இறுதிச் சடங்கு :

உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமான பூமணியின் உடல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்படவுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory