» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக : காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு!
திங்கள் 11, மே 2026 9:00:41 AM (IST)

குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இதில் அரசியல் தலையீடுகள் இருக்காது என்று முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ச. ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் தனது முதல் நாள் பணியைத் தொடங்கினார். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சட்டம் - ஒழுங்கு குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதிரடி காட்டினார்.
நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சருக்கு, தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையிலான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின், தனது அறைக்குச் சென்ற விஜய், இருக்கையை வணங்கிவிட்டு அதில் அமர்ந்தார். பின்னர், பச்சை நிற மையால் தனது முதல் கோப்புகளில் கையொப்பமிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமைச் செயலகம் வந்த சில நிமிடங்களிலேயே சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதிகாரிகள் தரப்பில் போதிய தரவுகள் இல்லை எனக் கூறியபோதும், "இப்போதே கூட்டம் நடத்த வேண்டும், நான் சொல்வதைக் கவனியுங்கள்" எனக்கூறி கூட்டத்தைத் தொடங்கினார். அமைச்சர்கள் இன்றி அதிகாரிகளுடன் மட்டும் தனிப்பட்ட முறையில் இந்த ஆலோசனையை நடத்தினார்.
போலீசாருக்குச் சுதந்திரம்:
குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இதில் அரசியல் தலையீடுகள் இருக்காது. குற்றம் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடக்காமல் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடவாமல் தடுக்கக் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு:
"போதைப்பொருள் இல்லாத தமிழகமே எனது இலக்கு" எனத் தெரிவித்த அவர், இதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என உத்தரவிட்டார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தின் சிறிய நிகழ்வு கூட தனது கவனத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலகத்திலேயே மதிய உணவை முடித்த முதலமைச்சர் விஜய், பிற்பகல் 3:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பெரியார் திடல் நோக்கிச் சென்றார். அவர் சென்ற வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் கருத்து
P.GANAPATHYRAMமே 11, 2026 - 12:37:49 PM | Posted IP 172.7*****
Supper action king maker Thalapathy😘😘😘😘👏👏👏👏👏👏
Gangadharanமே 11, 2026 - 12:19:42 PM | Posted IP 104.2*****
வணக்கம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை அசத்தல். நான் காவல்துறையில் பணி புரிந்து விருப்ப ஓய்வில் சென்றவன். என் மனதில் உள்ளதை செய்தது செய்ய போகும் முதல்வரே அசத்துங்கள். அமைச்சர்கள் இன்றி புள்ளி விவரங்கள் இன்றி ஆலோசனை செய்த முதல் கூட்டமே மிக சிறப்பு அதிரடி. நன்றி
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம்!
செவ்வாய் 12, மே 2026 5:50:25 PM (IST)

விஜய்க்கு சி.வி. சண்முகம் அணியினர் ஆதரவு : அதிமுகவில் பிளவு - கட்சித்தலைமை கண்டனம்!
செவ்வாய் 12, மே 2026 5:23:54 PM (IST)

முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு: காமராஜ் எம்.எல்.ஏ. அ.ம.மு.க.-வில் இருந்து நீக்கம்!
செவ்வாய் 12, மே 2026 4:18:38 PM (IST)

தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16பேர் விசைப்படகுடன் சிறைபிடிப்பு!
செவ்வாய் 12, மே 2026 3:36:31 PM (IST)

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ பங்கேற்க தடை -உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 12, மே 2026 12:57:38 PM (IST)

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு : சி.வி.சண்முகம் அறிவிப்பு
செவ்வாய் 12, மே 2026 12:26:26 PM (IST)



Balaமே 12, 2026 - 10:15:26 AM | Posted IP 172.7*****