» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு: காமராஜ் எம்.எல்.ஏ. அ.ம.மு.க.-வில் இருந்து நீக்கம்!

செவ்வாய் 12, மே 2026 4:18:38 PM (IST)



மன்னார்குடி தொகுதி அ.ம.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், சட்டமன்றத்தில் த.வெ.க. அரசுக்கு ஆதரவாகப் பேசியதைத் தொடர்ந்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று காலை சட்டமன்றம் கூடியபோது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எஸ். காமராஜ், "தமிழக இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள், நாங்களும் உங்களை நம்புகிறோம். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். நிச்சயம் ஒரு நல்ல அரசை முதலமைச்சர் விஜய் தருவார்" எனப் புகழ்ந்து பேசினார். மேலும், முதலமைச்சர் கையெழுத்திட்ட முதல் 3 திட்டங்களும் தமிழகத்திற்குப் பெரிய நன்மையை ஏற்படுத்தும் என்றும் அவர் பாராட்டினார்.

கட்சியின் முடிவுக்கு மாறாகத் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, எஸ். காமராஜை நீக்கி டி.டி.வி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில்: "அ.ம.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் உழைப்பால் வெற்றி பெற்ற காமராஜ், கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டுள்ளார். எனவே அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்." என்றார்.

கட்சி நீக்கத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ். காமராஜ் கூறியதாவது: "சட்டமன்றத்தில் முதலமைச்சரின் நல்ல திட்டங்களைப் புகழ்ந்து பேசியது தவறா? என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எனக்குக் கவலையில்லை. "எனது மன்னார்குடி தொகுதி மக்களுக்குத் தேவையான திட்டங்கள் முறையாகச் சென்று சேர வேண்டும் என்பதே எனது இலக்கு. "நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எனது ஆதரவு நிச்சயமாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கே (த.வெ.க.) இருக்கும்."

திருப்பத்தூர் வழக்கில் கே.ஆர். பெரியகருப்பனின் தோல்வி மற்றும் ஒரு வாக்கு வித்தியாசம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரின் இந்த ஆதரவு முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சிக்குக் கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory