» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக்கில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி: சேலை சக்கரத்தில் சிக்கியதால் விபரீதம்!
ஞாயிறு 10, மே 2026 9:47:06 PM (IST)
கயத்தாறு அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது, டயரில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் தடியம்பட்டி கிராமம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை செல்லப்பாண்டி மற்றும் மகாலட்சுமி இருவரும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காகத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, மீண்டும் இருவரும் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கயத்தாறு - நாகலாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த மகாலட்சுமியின் சேலை எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில், மகாலட்சுமி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கயத்தாறு காவல் நிலையப் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மகாலட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம்!
செவ்வாய் 12, மே 2026 5:50:25 PM (IST)

விஜய்க்கு சி.வி. சண்முகம் அணியினர் ஆதரவு : அதிமுகவில் பிளவு - கட்சித்தலைமை கண்டனம்!
செவ்வாய் 12, மே 2026 5:23:54 PM (IST)

முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு: காமராஜ் எம்.எல்.ஏ. அ.ம.மு.க.-வில் இருந்து நீக்கம்!
செவ்வாய் 12, மே 2026 4:18:38 PM (IST)

தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16பேர் விசைப்படகுடன் சிறைபிடிப்பு!
செவ்வாய் 12, மே 2026 3:36:31 PM (IST)

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ பங்கேற்க தடை -உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 12, மே 2026 12:57:38 PM (IST)

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு : சி.வி.சண்முகம் அறிவிப்பு
செவ்வாய் 12, மே 2026 12:26:26 PM (IST)


