» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:29:25 AM (IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை பெரம்பூர் தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம், வியாசர்பாடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "வட சென்னை குறித்துத் தவறான பிம்பத்தை ஆளுங்கட்சியினர் உருவாக்கி வைத்துள்ளனர். வட சென்னையை உண்மையான வளர்ச்சிப் பாதைக்கு விஜய் அழைத்துச் செல்வார். எனவே, அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்," என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "விஜய் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை நாங்கள் அனைவரும் வரவேற்று ஏற்கிறோம்," என்றார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதன்மை வேட்பாளர் என்ற போதிலும், பெரம்பூர் தொகுதி தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று இந்தத் தீர்மானம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்தது தனியார் பால் விலை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
புதன் 25, பிப்ரவரி 2026 5:16:51 PM (IST)

முதுகில் குத்தினார்கள்; 9 ஆண்டு காலம் காத்திருந்தேன்: இபிஎஸ் மீது சசிகலா கடும் தாக்கு
புதன் 25, பிப்ரவரி 2026 4:43:18 PM (IST)

நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை: முதல்வர் இரங்கல்
புதன் 25, பிப்ரவரி 2026 4:11:46 PM (IST)

முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார்
புதன் 25, பிப்ரவரி 2026 3:12:05 PM (IST)

