» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: கடத்தல் நாடகமாடிய அழகு நிலைய பெண் கைது!

வியாழன் 6, அக்டோபர் 2022 5:17:03 PM (IST)

திருப்பூர் அருகே பைனான்ஸ் அதிபரிடம் ரூ.2கோடி மோசடி செய்துவிட்டு, கடத்தல் நாடகமாடிய அழகு நிலைய பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் பிரவீனா. இவரது கணவர் சேகர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். பிரவீனா பல்லடம் மங்கலம் சாலையில் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வி மற்றும் அவரது கணவர் சிவகுமார் என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது. மேலும் சிவகுமாருடன் சேர்ந்து வர்த்தகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பிரவீனா காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல் போன பிரவீனாவை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரின் தாய் பிலோமினா மற்றும் இரண்டாவது கணவர் சந்திரகுமார் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரவீனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. 

அதில் சிவகுமார் உடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்ததாகவும் தன்னை ஏமாற்றி தனது நிலத்தின் பேரில் வங்கி கடன் பெற்றதாகவும் பணத்தை திரும்ப தருவதாக கூறி திருச்சிக்கு அழைத்து சென்று வீட்டில் அடைத்து மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்று தன்னை சித்ரவதை செய்வதாக கூறி இருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்த போது ஈரோட்டில் பதுங்கி இருந்த சிவகுமார் மற்றும் பிரவீனாவை கண்டுபிடித்து பல்லடம் அழைத்து வந்தனர். 

விசாரணையின் போது பிரவீனா பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க அவரின் தாய் பிலோமினா மற்றும் அவரது இரண்டாவது கணவர் இருவரும் மிரட்டி வந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோவை பிரவீனாவின் தாய் மற்றும் அவரது இரண்டவது கணவர் இருவரும் சேர்ந்து வெளியிட்டு நாடகமாடி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் குறிப்பிட சொத்துக்களை மோசடி செய்து பெற்றுக் கொண்டு வங்கி கடன் பெற்று தன்னை ஏமாற்றியதாக கோவையை சேர்ந்த குமரேசன் என்பவர் கொடுத்த புகாரால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அதன் படி கோவை சாய்பாபா காலனி சேர்ந்த குமரேசன் என்பவரிடம் சிவக்குமார் மற்றும் பிரவீனா இருவரும் கணவன் மனைவி என அறிமுகமானதாகவும் தனக்கு கடன் பிரச்சனையால் பணம் தேவைப்பட்டதால் வங்கியில் கடன் பெற்று தருமாறு தனக்கு சொந்தமான இடத்தை பிரவீனா பெயரில் மாற்றிக் கொடுத்ததாகவும் ஆனால் 2 கோடி கடன் பெற்று பணத்தை தராமல் அலைகழித்து வந்ததாகவும் தற்போது வீடியோ வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்து புகார் அளித்துள்ளார். நில மோசடி புகாரின் பேரில் பிரவீனா மற்றும் சிவகுமாரை போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory