» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை : அண்ணாமலை விமர்சனம்
சனி 20, டிசம்பர் 2025 10:42:57 AM (IST)
ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியும் நேரத்திலும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளபதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: பணி நிரந்தரம் கோரி, போராட்டம் நடத்திய 1,500-க்கும் மேற்பட்ட செவிலியர்களை, கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு.இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந் திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356-ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தது. ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கரோனா காலத்தில், தங்கள்உயிரை பற்றிக் கூடக் கவலைப்படாமல், பொதுமக்கள் நலனுக்காக முன்னின்று பணியாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்தான். ஏற்கெனவே, 2023-ம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்துக் குரல் கொடுத்திருந்தோம்.
தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு துணை நிற்போம். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிகரிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 11:08:57 AM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்: ஜனவரி 12 முதல் அமல்!
சனி 20, டிசம்பர் 2025 10:59:33 AM (IST)

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)


.gif)