» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்: ஜனவரி 12 முதல் அமல்!

சனி 20, டிசம்பர் 2025 10:59:33 AM (IST)

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜனவரி 12-ம் தேதிக்கு பிறகு ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் முறைகேடுகளை தடுக்க ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது. இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை ரயில்வே வாரியம் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, டிசம்பர் 29-ம்தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், ஜனவரி 5-ம்தேதிக்கு பின்னர் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆகிறது.

ஜனவரி 12-ம்தேதிக்கு பிறகு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உண்மையான பயனாளர்களுக்கு ரயில்வே டிக்கெட் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory