» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)
சென்னை அண்ணா சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் இண்டர்நெட், தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 மாடிகள் கொண்ட பி.எஸ்.என்.எல். கட்டடத்தில் 2-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர். தீவிபத்து காரணமாக அண்ணாசாலை பகுதியில் பி.எஸ்.என்.எல் இண்டர்நெட், தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தால் பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் கரும்புகை வெளியேறிவருகிறது.
காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிகரிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 11:08:57 AM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்: ஜனவரி 12 முதல் அமல்!
சனி 20, டிசம்பர் 2025 10:59:33 AM (IST)

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை : அண்ணாமலை விமர்சனம்
சனி 20, டிசம்பர் 2025 10:42:57 AM (IST)

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)


.gif)