» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

வியாழன் 21, மார்ச் 2024 12:42:26 PM (IST)

தேர்தல் ஆணையத்துக்கு புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்ட நடவடிக்கையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் 2023-ம் படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடைக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாகூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், இந்தியத் தலைமை நீதிபதி அல்லாமல், தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் குழு சுதந்திரமாகவே இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை மேற்கொண்டிருப்பதாக மத்திய அரசு, விளக்கம் கொடுத்திருந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர் நியமன நடவடிக்கையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒருநாள் முன்புத்தான், தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டமே நடைபெற்றது என்பதை மறுத்திருந்தது.

இதுவரை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு திருத்தம் செய்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory