» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செந்தில் பாலாஜி வழக்கு: மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:49:36 AM (IST)

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம், சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அமலாக்கத்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்.எல்.ஏ. பொறுப்பில் உள்ளதால் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது. 

விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு நீதிபதி அபய்.எஸ். ஓகா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் 320 நாட்களுக்கு மேலாக மனுதாரர் சிறையில் உள்ளார். தனி நபர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை நிறுவனம் தொடர்புடைய மோசடியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என வாதிட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory