» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் மனு

சனி 27, ஏப்ரல் 2024 4:48:59 PM (IST)

"என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை' என மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ல் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, 'டெல்லி மதுபான கொள்கை ஊழலுக்கு தலைமை ஏற்று, சதி திட்டங்கள் தீட்டியதில் முக்கிய நபராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்துள்ளார். இந்த ஊழலில் அதிகம் பயன் அடைந்தது, ஆம் ஆத்மி கட்சி. 'எனவே, ஒரு குற்றத்திற்காக காரணத்துடன் ஒருவரை கைது செய்வது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை மீறுவதாகாது' என, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 27) உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், '' அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லை'' என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory