» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வியாழன் 21, மார்ச் 2024 8:25:45 AM (IST)

ரஷிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த ரஷிய அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 88 சதவீத வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ரஷிய மக்களுக்கு அமைதி, முன்னேற்றம், வளமை அமையவும் அவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 

பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் பற்றி கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்தியா-ரஷியா சிறப்பு உத்திசார்ந்த கூட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர். ரஷியா-உக்ரைன் போர் பற்றியும் புதினும், மோடியும் ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்யரீதியிலான முயற்சிகள் மூலம்தான் இந்த போருக்கு தீர்வு காண முடியும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் தெரிவித்தார். தொடர்ந்து தொடர்பில் இருக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory