» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புற்றுநோய்க்கு போலி மருந்து: அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை!

செவ்வாய் 19, மார்ச் 2024 11:38:07 AM (IST)

டெல்லியில் போலி மருந்து விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு, புற்றுநோய் மற்றும் கீமோதெரபி மருந்துகள், போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, சமீபத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று, இது தொடர்பாக டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 10 இடங்களில், அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்களான விபில் ஜெயின், சூரஜ் ஷாட், நீரஜ் சவுகான், பர்வேஸ் மாலிக், கோமல் திவாரி, அபினய் மற்றும் துஷார் சவுகான் உள்ளிட்டோரின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.இந்த சோதனையின் போது, 65 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல முக்கிய குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், சூரஜ் ஷாட் வீட்டில் இருந்து மட்டும், 23 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory