» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிப்பு - நடத்தை விதிகள் உடனடி அமல்!!

வெள்ளி 15, மார்ச் 2024 4:26:55 PM (IST)

4 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதேபோல் ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பாக வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலையும், 4 மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில், தேர்தல் கால அட்டவணை தொடர்பான அறிவிப்பு நாளை(சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory