» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி போட்டி : நேபாளத்துன் இந்திய அணி நாளை மோதல்!
வெள்ளி 15, அக்டோபர் 2021 12:23:18 PM (IST)
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் நாளை (16 ஆம் தேதி) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.
13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
வங்காளதேச அணியுடன் நடந்த முதல் போட்டியும் இலங்கை அணியுடன் நடந்த இரண்டாவது போட்டியும் சமனில் முடிந்த நிலையில் நேபாள அணியுடன் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மாலத்தீவு அணியை நேற்று எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு அணியை வீழ்த்தியது.ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் மன்வீர் சிங்க் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக மாலத்தீவு அணி வீரர் அலி அஷஃபாக் 45வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நாளை 16 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
