» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!

புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)



அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 19வது சீசனுக்கான மினி ஏலத்தில் கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 

ஐபிஎல் 19வது தொடர், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி துவங்கி, மே 31ம் தேதி முடியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ள 10 அணிகள், ரூ.237 கோடி கையிருப்புடன் பங்கேற்ற மினி ஏலம், அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் 350 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. கடைசி நேரத்தில் மேலும் 19 பெயர்கள் சேர்க்கப்பட்டன. அவற்றில், 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஏலத்தில் முதல் வீரராக, டேவிட் மில்லரை, அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு, டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க, எதிர்பார்த்தபடி, கடும் போட்டி நிலவியது. கடைசியில், நடப்பு ஏலத்தில் அதிகபட்சமாக, ரூ. 25.20 கோடிக்கு, கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அடுத்தபடியாக, இலங்கை வீரர் மதீஷா பதிரனாவை, ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. 

சென்னை அணி, பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகிய இரு இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடிக்கு எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.13 கோடிக்கு தட்டிப் பறித்தது. அந்த அணி, ஜாக் எட்வர்ட்சை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. கொல்கத்தா அணி, முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு வாங்கியது. பெங்களூரு அணி, வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட்

கேமரூன் கிரீன் 25.20 கோடி கொல்கத்தா

மதீஷா பதிரனா 18.00 கோடி கொல்கத்தா

பிரசாந்த் வீர் 14.20 கோடி சென்னை

கார்த்திக் சர்மா 14.20 கோடி சென்னை

லியாம் லிவிங்ஸ்டோன் 13.00 கோடி ஐதராபாத்

முஸ்தபிசுர் ரஹ்மான் 9.20 கோடி கொல்கத்தா

ஜோஷ் இங்லீஸ் 8.60 கோடி லக்னோ

அகுவிப் தார் 8.40 கோடி டெல்லி

ரவி பிஷ்னோய் 7.20 கோடி ராஜஸ்தான்

வெங்கடேஷ் ஐயர் 7.00 கோடி பெங்களூரு

ஜேசன் ஹோல்டர் 7.00 கோடி குஜராத்

ராகுல் சஹர் 5.20 கோடி சென்னை

மங்கேஷ் யாதவ் 5.20 கோடி பெங்களூரு

பென் துவார்ஷுயிஸ் 4.40 கோடி பஞ்சாப்

பதும் நிசங்கா 4.00 கோடி டெல்லி

கூப்பர் கனோலி 3.00 கோடி பஞ்சாப்

தேஜஸ்வி சிங் 3.00 கோடி கொல்கத்தா

ஜாக் எட்வர்ட்ஸ் 3.00 கோடி ஐதராபாத்

முகுல் சவுத்ரி 2.6 கோடி பஞ்சாப்

அக்சத் ரகுவன்ஷி 2.20 கோடி லக்னோ

லுங்கி நிகிடி 2.00 கோடி டெல்லி

ரச்சின் ரவீந்திரா 2.00 கோடி கொல்கத்தா

டேவிட் மில்லர் 2.00 கோடி டெல்லி

பென் டக்கெட் 2.00 கோடி டெல்லி

ஃபின் ஆலன் 2.00 கோடி கொல்கத்தா

அகீல் ஹோசேன் 2.00 கோடி சென்னை

அன்ரிச் நார்ட்ஜே 2.00 கோடி லக்னோ

ஜேகப் டஃபி 2.00 கோடி பெங்களூரு

வனிந்து ஹசரங்கா 2.00 கோடி லக்னோ

மேட் ஹென்றி 2.00 கோடி சென்னை

மேத்யூ ஷார்ட் 1.50 கோடி சென்னை

சலீல் அரோரா 1.50 கோடி ஐதராபாத்

குவின்டன் டிகாக் 1.00 கோடி மும்பை

சிவம் மாவி 75.00 லட்சம் ஐதராபாத்

கிரெய்ன்ஸ் ஃபுலெட்ரா 30 லட்சம் ஐதராபாத்

ஷிவாங் குமார் 30 லட்சம் ஐதராபாத்

பிரபுல் ஹின்கே 30 லட்சம் ஐதராபாத்

அமித் குமார் 30 லட்சம் ஐதராபாத்

ஓங்கார் தர்மலே 30 லட்சம் ஐதராபாத்

சாகிப் உசேன் 30 லட்சம் ஐதராபாத்

அன்கேப்டு வீரரருக்கு ரூ.14.20 கோடி

ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய அணிக்காக இதுவரை ஆடாத, அன்கேப்டு வீரர்களான, விக்கெட் கீப்பர், கார்த்திக் சர்மா (19), ஆல் ரவுண்டர், பிரசாந்த் வீர் (20) ஆகிய இருவரையும், தலா ரூ.14.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்து திகைப்படைய செய்துள்ளது. ஏலத்தில் இந்த இருவரின் அடிப்படை விலை, வெறும் ரூ. 30 லட்சம் மட்டுமே. ஆனால், 47 மடங்கு விலை கொடுத்து, இவர்களை ஏலத்தில் சிஎஸ்கே எடுத்தது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில், அன்கேப்டு வீரர்களுக்கு கிடைத்துள்ள அதிகபட்ச ஏலத் தொகை இதுவே.

ரூ.25.20 கோடி... காஸ்ட்லி கேமரூன்

வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக, கடந்த 2024 சீசனின்போது, ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், தற்போதைய ஏலத்தில், ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை, ரூ. 25.20 கோடிக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்து அசத்தியுள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் ஏல வரலாற்றில், 3வது அதிகபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக, கேமரூன் உருவெடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory